Tamilnadu
'வா செல்ஃபி எடுக்கலாம்'.. ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு நண்பர்களுக்கு நடந்த சோகம் சம்பவம்!
திருப்பூர் மாவட்டம், அணைப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே 2 இளைஞர்களின் சடலங்கள் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்தது. பின்னர் அங்கு சென்ற போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த வாலிபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், விஜய் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருப்பூரில் தங்கி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ரயில் தண்டவாளம் அருகே நின்று ரயில் வரும் போது செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இவர்கள் மீது ரயில் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. செல்ஃபி எடுக்கும் போது ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!