Tamilnadu
”ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்”.. அமைச்சர் தங்கம் தென்னரசு!
ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்ட அமைச்சர் ரகுபதி, வழக்கறிஞர் வில்சன் MP ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, " அமைச்சரை நியமிக்கவும், நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதலமைச்சர் இன்று எழுதி அனுப்ப உள்ளார்.
ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். ஆளுநர் அதிகார வரம்பு மீறிச் செயல்படுகிறார். இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவது போல் உள்ளது ஆளுநரின் செயல்பாடுகள்.
ஒன்றிய அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். அவர்களுக்கு இப்படி உத்தரவு போட முடியுமா? ஆளுநர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே செந்தில் பாலாஜி மீது இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
இதுபோன்ற விவகாரங்களைச் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தி.மு.க எதிர்கொள்ளும். எந்த ஆயுதத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த மோதல் போக்கை ஆரம்பித்து வைத்தது ஆளுநர்தான்" என தெரிவித்துள்ளார்.
பின்னர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி பேசும்போது, "அரசியல் அமைப்பு சட்ட சரத்துக்களைப் பின்பற்றாமல் செயல்படும் ஆளுநரின் இது போன்ற செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட வேண்டியவை. ஆளுநர் சொல்லுகின்ற அத்தனை சட்ட பிரிவுகளின்படி தான் அவர் நடந்து இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!