Tamilnadu
“3 நாடுகளில் கையாளும் முறை.. சென்னையில் வேஸ்ட் எனர்ஜி திட்டம்” - மேயர் பிரியா சொன்ன அசத்தல் அறிவிப்பு!
திடக்கழிவு மேலாண்மையை கையாளும் முறை குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பிரான்ஸ் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது மிகவும் சவாலான பணியாக உள்ளது. சென்னையில் திருக்கழிவு மேலாண்மையின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், திருக்கழிவு மேலாண்மையை கையாளும் முறை குறித்து ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தோம். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு முறையில் திடக்கழிவு மேலாண்மை கையாளப்படுகிறது. இத்தாலி நாட்டில் பிளாஸ்டிக்'கை கையால தனி பிளாண்ட் ஒன்றை உருவாக்கி அதனை கையாண்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி பொருத்தவரையில் பிளாஸ்டிக் ஒரு சவாலான விஷயமாக உள்ளது. இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து, இத்தாலி நாட்டில் பயன்படுத்தும் முறையை இங்கு செயல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஸ்பெயின் நாட்டில் குப்பைகளை எடுக்கும் பொழுதே அந்த லாரிகளில் பிளாஸ்டிக் ஆர்கானிக் என பல வித குப்பைகள் பிரிக்கப்படுகிறது. அதுபோல சென்னை மாநகராட்சியிலும் செயல்படுத்த முடியுமா என ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கையாளப்படும் தொழில் நுட்பம் சார்ந்த திட்டங்களை சென்னையிலும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் சென்னையில் இரண்டு பயோ சி.என்.ஜி ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் கோயம்பேட்டில் 2 மற்றும் சோளிங்கநல்லூரில் 2 என மொத்தம் 4 புதிய ஃபயோ சி.என்.ஜி நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை கொடுங்கையூரில் புதிதாக வேஸ்ட் எனர்ஜி பிளாண்ட் உருவாக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!