Tamilnadu

”சமூக நீதியை நிலைநாட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்”.. பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி புகழாரம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறையும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 13 முறை வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்து நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 15ம் தேதி சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் திருவாரூர் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கலைஞர் கோட்டத்தைல் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி திறந்து வைத்தார். பிறகு இந்த விழாவில் பீகார் துணை முதலமைச்சர் தேசுஸ்வி யாதவ் பேசுகையில், "சமூக நீதியை காத்ததில் பெரும் பங்கு வகித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். திராவிட கருத்தியலை நிலை நிறுத்தியதில் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர்.

கலைஞரின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டவர்கள் கல்வியில், வேலை வாய்ப்பு பெற உதவியது. கலப்பு திருமணங்களை ஆதரித்து சட்டப்பூர்வமாக்கியதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்டினார் கலைஞர். சமூக நீதியை காத்ததிலும், சமூக ஏற்றத் தாழ்வுகளை களைந்து எடுத்ததிலும் கலைஞர் பெரும் பங்கு வகித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: கலாஷேத்ரா, மல்யுத்த வீராங்கனைகளுக்கு குரல் கொடுத்தீர்களா? - குஷ்பூவிடம் கேள்வியெழுப்பிய மாதர் சங்கம் !