Tamilnadu
சென்னையில் எப்போது மழை நிற்கும்?.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் முடிந்தும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இரவு நேரங்களில் கூட தூக்கம் இல்லாமல் வெப்பத்தால் வேதனையடைந்தனர்.
இந்நிலையில் ஜூன் 18ம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் பேடி நேற்று காலையிலிருந்தே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இதன் காரணமாகச் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது மழை பெய்து தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் மழையை ரசித்து வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தரமணி ஆலந்தூரில் தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 10 செ.மீ., மேற்குத் தாம்பரம், குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ., கொரட்டூர், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தலா 8 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், பூவிருந்தவல்லி, தாம்பரத்தில் தலா 7 செ.மீ., அயனாவரம், சென்னை ஆட்சியர் அலுவலகம் பகுதியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!