Tamilnadu
திருமணம் நடந்த 10 நாளில் உயிரிழந்த புதிய தம்பதி.. தேனிலவு சென்ற இடத்தில் நடந்த துயரம்!
சென்னை பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்னி. மருத்துவரான இவருக்கும் லோகேஷ்வரன் என்ற மருத்துவருக்கும் கடந்த ஜூன் 1ம் தேதி மிக விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் பங்கேற்று புதிய தம்பதிகளை வாழ்த்தினர்.
இதையடுத்து புதிய தம்பதியினர் தேனிலவுக்காகத் திருமணம் முடிந்த கையோடு இந்தோனேசியா நாட்டிற்குச் சென்றனர். இங்கு மகிழ்ச்சியாக தங்களது திருமணத்தைக் கொண்டாடினர்.
இந்நிலையில் பாலி தீவிற்குச் சென்ற இவர்கள் அங்குள்ள கடலுக்குப் படகில் சென்று போட்டோஷூட் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்துள்ளது.
இதில் படகிலிருந்த புதிய தம்பதிகள் நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அந்நாட்டு போலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் லோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் விபூஷ்னியாவின் உடல் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த இவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தம்பதிகளின் பெற்றோர்களுக்குப் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
திருமணம் நடந்த பத்து நாளிலேயே புதிய தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!