Tamilnadu
”கலைஞர் அரசியல்வாதி அல்ல கொள்கைவாதி” : தொல்.திருமாவளவன் பேச்சு!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறையும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 13 முறை வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்து நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா ஒரு வருடத்திற்குக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.
அதன் ஒருபகுதியாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.க தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், "வரலாற்று சிறப்பு மிகுந்த எழுச்சி விழா இது. தலைவர் கலைஞர் என்றால் பேரறிஞர் அண்ணா என விடைக்கிடைக்கும். மாபெரும் பேராளுமை முத்தமிழறிஞர் கலைஞர். பேரறிஞர் வழியில் பெரியாரின் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தவர் கலைஞர்.
தான் தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கியவர் கலைஞர். பெரியார் நினைவு சமத்துவபுரம் இந்தியாவ வேறு எந்த முதல்வரும் எண்ணிக்கூடப் பார்க்காத ஒன்று. எல்லோரையும் சேர்ந்து வாழவைக்க வேண்டும் என்ற சிந்தனை பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனை. மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவிலையே முதன் முதலில் முழங்கிய தலைவர் கலைஞர்.
கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாளாக அறிவிப்பதாகச் சொன்னீர்கள். தலைவர் கலைஞர் மாநிலத்தைக் கடந்தவர். எனவே முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை மாநில சுயாட்சி நாளாக அறிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !