Tamilnadu
மகனுக்கு பெண் பார்க்க சென்ற பெற்றோர்.. குறுக்கே வந்த சரக்கு வாகனம்: அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்ட அள்ளி பாரத கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்கள் முடிவு செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து பல இடங்களில் வரன்தேடி வந்தனர். இந்நிலையில் மகனுக்குப் பெண் பார்ப்பதற்காகக் கணவன் மனைவி இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றனர். மேலும் மணிகண்டன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் தங்கையுடன் சென்றார்.
பின்னர் இவர்களது இருசக்கர வாகனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பெற்றோர்கள் வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பச்சையப்பன், பாப்பாத்தி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனுக்குப் பெண் பார்ப்பதற்காகச் சென்றபோது சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!