Tamilnadu
“திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் மலரும்.. கர்நாடகா ஒரு முன்னுதாரணம்” : அமைச்சர் பொன்முடி பேச்சு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா மஹாலில், எழுத்தாளர் சந்தாகுமாரி சிவகடாட்சம் உலக பொதுமறையாம், திருக்குறளை கதை வடிவில் தொகுத்த எழுதி, சாந்தி சிவா பதிப்பகம் பதிப்பித்த கதை சொல்லும் குறள் என்னும் நூலின் வெளியிட்டு விழா நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் க.பொன்முடி கூறியதாவது, "ஒரு டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் பேச்சிலும் படைப்பிலும் அதிக ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதும் தமிழுக்கான டாக்டர் பட்டத்தை அமெரிக்காவில் பெற்றுள்ளதும் அதிக மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் வளர்ச்சிக்காக முதலமைச்சர் தொடர்ந்து அதிக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக திருவள்ளுவருக்கும் அவரின் குரளுக்கும் பெருமை சேர்த்தது கலைஞர். அதுமட்டுமில்லாமல் திருவள்ளுவருக்கும் தமிழுக்கு பெருமையும் புகழையும் சேர்த்தது திராவிட ஆட்சியே.
மேலும் திருக்குறள் சட்ட மன்றத்தில் இன்று ஒலிக்க காரணம் கலைஞர் மட்டுமே அதேபோல் தமிழ் தாய் பாடலை அனைத்து இடங்களிலும் இசையாக ஒலிகாமல் பாட வேண்டும் என்ற தமிழ் வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் முதலமைச்சர்.
மேலும் நிறத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது பிளாக் மொமென்ட், சாதி அடிப்படையில் ஏற்ற தாழ்வுகளை அகற்றி மொழி அடிப்படையில் மொழி உணர்வை ஏற்படுவது ட்ராவிடியன் மொமெண்ட். வரும் காலங்களில் மருத்துவ புத்தகங்களும் தமிழில் எழுதப்பட வேண்டும் இன்று மேடையில் இருந்த மருத்துவம் படித்த புத்தக எழுத்தாளரை கேட்டுக் கொள்கிறேன், அதேபோல் கதை கேட்கும் போது தான் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகமாகிறது. எனவே கல்லூரி மாணவர்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்து தமிழ் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.
தமிழுக்காக இருப்பது தான் திராவிட மாடல். கர்நாடகா தேர்தல் முடிவிலும் திராவிட மாடல்தான் பிரதிபலித்திருக்கிறது. மதம் சாதிய வேறுபாடு அற்ற திராவிட மாடல் ஆட்சி இந்தியாவில் மலரும் என்பதற்கான ஒரு முன்னுதாரணம் தான் கர்நாடகா தேர்தல் முடிவு” என தெரிவித்தார்.
Also Read
-
🔴LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவை: இந்த அக்கறை அதிமுக ஆட்சியில் இல்லாமல் போனது ஏன்? - முதலமைச்சர் பதிலடி!
-
“ஆளுநர் அல்ல ‘ஓடுநர்’ – ஆர்.என்.ரவிக்கு ஆளுநர் பதவி எதற்கு?” – கடுமையாக விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“திராவிட இயக்க முன்னோர்கள் வகுத்த வழியில் தமிழ்நாடு என்றும் தனித்து நிற்கும்” : கனிமொழி எம்.பி பெருமிதம்!
-
“112 அரசு கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு!” - முழு விவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசு புதிய அஞ்சலக விதிமுறைகளை கைவிட வேண்டும் : சு.வெங்கடேசன் MP கடிதம்!