Tamilnadu
கவனம் தேவை.. செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தைக் கடந்த கல்லூரி மாணவி: ரயில் மோதி பரிதாப பலி!
சென்னை அடுத்துள்ள புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவர் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு மின்சார ரயிலில் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று கல்லூரி முடிந்ததும் வழக்கம் போல் வீட்டிற்குச் செல்வதற்காக பொத்தேரி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் ரயில்நிலையத்தில் இருந்த மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல் செல்போனில் பேசியபடியே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற பல்லவன் விரைவு ரயில் மாணவி கிருத்திகா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த சக கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலிஸார் மாணவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!