Tamilnadu
அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்பு.. ஒன்றிய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு : டி.ஆர்.பாலு MP கடிதம்!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தற்போது அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்று தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த இந்தி திணிப்பிற்கு தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய வானொலியை 'ஆகாஷ்வாணி' என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், அகில இந்திய வானொலியை 'ஆகாஷ்வாணி' என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவு தேவையில்லாத ஒன்று . தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில வானொலிகளில் அகில இந்திய வானொலி, ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
மாநிலச் செய்திகளில் அகில இந்திய வானொலி என்றும், ஆங்கில செய்திகளில் ஆல் இந்தியா ரேடியோ என்றும் பயன்படுத்தப்படுகின்றன. வானொலி என்பது ஆகாஷ்வாணி என்ற வார்த்தையின் தமிழ் சொல்லே ஆகும் . இதை மாற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தேவையில்லாதவை.
ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாட்டில் பொதுமக்கள் இடையேயும், அரசியல் கட்சியினர் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தலையிட்டு, முன்பிருந்த நிலையே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!