Tamilnadu
நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி.. 'சதுரங்க வேட்டை' படம் பாணியில் நூதன மோசடி: போலிஸிடம் சிக்கிய 4 பேர்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சந்தேகம் படும்படி சிலர் தங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த விடுதியில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு அறையில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள், செம்பு கலசங்கள், கருப்பு நிற அரிசி, போலியான அடையாள அட்டைகள் மற்றும் கண்ணாடிகள் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த அறையிலிருந்த பெங்களூருவைச் சேர்ந்த சூர்யா, குபாய்ப், ஜித்து, இர்சாத் ஆகிய 4 பேரிடம் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவில் வெளிவந்துள்ளது. இந்த கும்பல் சதுரங்க வேட்டை படத்தில் வருவதைப் போன்று மக்களிடத்தில் ஆசையைத் தூண்டி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், தங்களிடம் பெண்களை நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி உள்ளது. அதன் விலை ரூ.1 கோடி என கூறி ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து 4 பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!