Tamilnadu
“ஒன்றிய அரசு இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி நம் மீது தாக்குதல் நடத்துகிறது..” அமைச்சர் அன்பில் மகேஸ்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர தி.மு.க சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவினர் போல் களத்தில் இறங்கி செயல்படுபவர்கள் பாஜக போன்ற கட்சிகள் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் என்றுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து பிரச்னைகள் மீது தனிகவனம் செலுத்துகின்ற முதல்வரை தமிழ்நாடு பெற்றுள்ளது. அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1222 பொதுச்கூட்டங்களை நடத்துகின்ற ஒரே இயக்கம் திமுகதான். ஏனென்றால் அந்த அளவிற்கு சாதனைகளை செய்துள்ளோம்.
இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு சாதனைகளை செய்துள்ளோம் எனும் போது இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அதிலும் பல சாதனைகளை செய்து காட்டுவோம். கட்சியின் மூத்த முன்னோடிகள் அனுபவசாலிகள் பல தேர்தல்களை பார்த்தவர்கள். எனவே அவர்களிடம் இருந்து அனுபவத்தை பெறக்கூடியவர்களாக இளைஞர்கள் இருக்கவேண்டும். அதேபோல் இளைஞர்கள் வேகமாக துடிதுடிப்பாக செயலாற்றினால் பெரியவர்கள் அவர்களை தட்டிக்கொடுத்து இருவரும் சேர்ந்து செயலாற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் நாம் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
ஒன்றிய அரசு இல்லாததையும், பொல்லாததையும் எடுத்துச்சொல்லி நம் மீது தாக்குதல் நடத்துகிறது. கடந்த ஐந்து வருடமாக சோசியல் மீடியாக்களில் மட்டுமே கட்சி நடத்தி வருகின்றனர். எப்படி வீடியோ போடலாம், எப்படி எடிட் செய்யலாம், கிராபிக்ஸ் எப்படி சேர்க்கலாம் என்ற வேலையைத்தான் செய்து வருகிறார்கள். நம்மைப்போன்று களத்தில் இறங்கி செயல்படுபவர்கள் இல்லாத கட்சி பாஜக. ஆனால் முத்தமிழறிஞர் கற்றுக்கொடுத்த களப்பணியை நிருபிக்கின்ற வகையில் நமது தேர்தல் பணி இருக்கவேண்டும் என்றார்.
Also Read
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?