Tamilnadu
12-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் எப்போது ? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்.. முழு விவரம் இதோ !
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் நீட் தேர்வு வரும் மே 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மே 7-ம் தேதி நீட் தேர்வு முடிந்த மறுநாள் மே 8-ம் தேதி 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை - www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரி வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
பொதுத்தேர்வு குறித்த முடிவுகள் வெளியான பின்னரே உயர்கல்வியில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க இயலும். மாணவர்களின் முடிவு எப்படி இருந்தாலும் அதனை பாசிட்டிவாக எடுத்துக்கோள்ள வேண்டும்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்