Tamilnadu
மீன்பிடிக்க வீசப்பட்ட வெடிமருந்து தோட்டா: ஆற்றில் குளித்து கொண்டிருந்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் சிலர் வெடி மருந்து தோட்டாவை வீசி மீன்களை பிடித்து விற்பனை செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் சேர்ந்த வாலிபர்கள் மோகன் குமார் , பூபதி ஆகிய இருவர் ஆணை புலிகாடு பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது மீன் பிடிப்பதற்காகப் பெருமாள் என்பவர் அங்கு வந்துள்ளார். பிறகு அவர் வெடி மருந்து தோட்டாவைக் காவிரி ஆற்றில் வீசியபோது அது குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் அருகே விழுந்து வெடித்துள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பறித்து உடன் வந்த பூபதி தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு இது பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு அங்கு வந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன் குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து போலிஸார் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்தை வீசிய பெருமாளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிப்பதற்காகப் போடப்பட்ட வெடிமருந்து தோட்டாவில் வாலிபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!