Tamilnadu
“குழந்தை திருமணம்.. பாலியல் வன்கொடுமை.. கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்”: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்
திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் அந்த தனியார் ஓட்டல் உரிமையாளர், AVS தனிப்படை பிரிவு ஆய்வாளர் கருணாகரனுக்கு தகவல் அளித்தார்.
அந்த தகவலின் அடிப்படையில் கருணாகரன் தலைமையிலான போலிஸார் விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் (40) என்பவரும், திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜா பானு (50) என்பவரும் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும், அச்சிறுமியை அச்சுறுத்தி மேற்படி பிரபின் கிறிஸ்டல்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தை நல அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ, விபச்சார தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், பிரபின் கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக தொலைகாட்சி நிறுவனம் ஒன்றில் நிருபராக வேலை பார்த்து, தற்போது "சிலந்தி வலை" என்ற மாதாந்திர பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிவதும், ரமீஜா பானுவுடன் சேர்ந்துக்கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததும், பாதிக்கப்பட்ட சிறுமியை பல நபர்களுக்கு ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இக்குற்ற செயல்களுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரான நித்யாவும் உடந்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து பிரபின் கிருஸ்டல் ராஜ், ரமீஜா பானு மற்றும் நித்யா மூன்று பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் தொடர் விசாரணையில், மேற்படி சிறுமியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்பவரது மகன் பாலமுருகன் (29) என்பவருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் பாலமுருகனின் பெற்றோர் குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர். அச்சிறுமியுடன் பாலமுருகன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதும், பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில்தான் அவரது பெற்றோர்கள் வாங்கிய கடனுக்காக ரமீஜா பானுவிடம் வேலைக்கு அனுப்பியதாகவும், அச்சிறுமியை ரமீஜா பானுவும், பிரபின் கிறிஸ்டல் ராஜும் சேர்ந்து கொண்டு ஏமாற்றி, கட்டாயய்பபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மூன்று பேர் மீது போக்சோ, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!