Tamilnadu
லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்.. திருமணத்திற்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் மணமகனுக்கு நடந்த துயரம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சிறு வஞ்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இளைஞரான இவர் சென்னை திருவேற்காடு அருகே புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மோகன்ராஜுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் மோகன்ராஜ், திருமண ஏற்பாட்டிற்காகத் தனது வருங்கால மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்
அப்போது, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற லாரி திடீரென திடீரென பிரேக் பிடித்து நின்றுள்ளது. இதனால் மோகன்ராஜின் இருசக்கர வாகனம் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் நிலையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெண் வீட்டார் மற்றும் மணமகனின் குடும்ப உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!