Tamilnadu
“போக்குவரத்து வாகனங்களை இயக்க BADGE தேவையில்லை” -அமைச்சர் சிவசங்கர் அறிவித்த 10 முக்கிய அறிவிப்புகள் இதோ!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பெண்கள் இலவச பேருந்து திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு, உள்ளிட்ட அநேக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானவை பின்வருமாறு :
=> கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு இந்தாண்டு ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
=> அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை.
=> அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பணியாளர்கள் ஓய்வறைகளுக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படும்
=> அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து மாதம் 5 முறை பயணம் செய்தால் 6 ஆவது முறை 50% கட்டண சலுகை
=> அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கு 4 பிரத்யேக இருக்கைகள் ஒதுக்கப்படும்
=> அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இளைஞர்களுக்கான வர்த்தக வாய்ப்புகள்
=> அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிமனை அளவில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவியர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும்
=> போக்குவரத்துத்துறை பணியாளர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை.
=> போக்குவரத்து வாகனங்களை இயக்க பேட்ஜ் தேவையில்லை
=> ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் நகரில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும்.
* ஆவடி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை ரூ.10.7 கோடியில் மேம்படுத்தப்படும்.
* ஆத்தூரில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும்
* ராஜபாளையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும் - போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!