Tamilnadu
ATM எந்திரத்தை கல்லால் உடைத்த உணவு டெலிவரி ஊழியர்.. காட்டிக் கொடுத்த CCTV காட்சி!
சென்னை கே.கே. நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கியின் ATM மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று அதிகாலை ATM எந்திரத்தை வாலிபர் ஒருவர் பெரிய கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனியார் வங்கியின் ஹைதராபாத் அலுவலகத்திற்குத் தகவல் வெந்துள்ளது. உடனே அவர்கள் கே.கே. நகர் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுத்துள்ளனர்
இந்த புகாரை அடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ATM மையத்திற்குள் யாரும் இல்லை. ஆனால் ATM எந்திரம் சேதடைந்து இருந்தது. இதையடுத்து போலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகத்தை மூடிக்கொண்டு இளைஞர் ஒருவர் கற்களைக் கொண்டு ATM எந்திரத்தை உடைக்கும் காட்சிப் பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி காட்சியைக் கொண்டு அந்த நபர் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வரும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர்தான் ATM மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரித்ததில், மது போதையில் ATM எந்திரத்தை கற்களால் உடைத்தாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“போதை பொருள் கடத்தலுக்கும், தவெக-வுக்கும் உள்ள தொடர்பு என்ன?” - முன்னாள் சபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி!
-
“யார்கிட்ட விளக்கம் கேட்க போறாரு?” - இந்து அறநிலையத்துறை Office உள்ளே புகுந்த மழைநீர்.. சேகர்பாபு கேள்வி!
-
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!
-
மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!
-
“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!