Tamilnadu
போதை ஆசாமிகளுக்கு ஷாக்.. ட்ரோன் மூலம் பிடிபட்ட கும்பல்: 8 பேரை சிறையில் அடைத்த திருப்பூர் போலிஸ்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே குற்றங்களுக்கு எதிராக பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வரப்படுகிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கஞ்சா ஒழிப்பு. கஞ்சா 2.O என்ற பெயரில் கைது வேட்டை செய்து வந்தனர். தற்போது கஞ்சா 3.O என்ற பெயரில் கைது வேட்டை செய்து வருகின்றனர் காவல்துறையினர்.
கஞ்சா வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிகாரிகள், இது தொடர்பாக பல்வேறு நபர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதில் பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு காவல்துறையும், அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் திருப்பூரில் கஞ்சா, போதை ஊசி உள்ளிட்டவை புழக்கத்தில் உள்ளதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் பலரையும் கைது செய்தனர். இருந்த போதிலும் திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம் எஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் இது அநேகமாக காணப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் ஒரு இரகசிய ஆபரேஷன் நடத்தினர். அப்போது ஒரு கும்பல் காட்டுப்பகுதி ஒன்றில் போதை பொருள் மாற்றுவது தெரியவந்தது. எனவே திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் ஆய்வாளர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் காவலர்கள் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை முதலில் சுற்றி வளைத்தனர். அதோடு அந்த காட்டு பகுதியில் இருக்கும் அனைத்து வழிகளிலும் காவலர்கள் நின்ற பின் பின்னர் டிரோன்களை ஓட்ட ஆரம்பித்தனர்.
குறிப்பாக இந்த டிரோன்கள், மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் பொருத்தப்பட்டிருந்தது. இதனை கண்டதும் அந்த காட்டு பகுதியில் இருந்த இளைஞர்கள் முதலில் திருதிருவென முழித்து, பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அதிகாரிகள் காட்டை முழுவதுமாக சுற்றி வளைத்து விட்டதால் அவர்களால் எங்கும் தப்பி செல்ல இயலவில்லை.
இருந்த போதிலும் அந்த கும்பலில் சிலர் தங்கள் 2 சக்கர வாகனங்கள் மூலம் தப்பி செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் அனைவரையும் அங்கிருந்த காவல்துறையினர் சுற்றி வளைத்து சுமார் எட்டு பேரையும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது திருப்பூர் மாநகர காவல்துறையினர் அந்த பகுதியில் அதிநவீன டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்கள் கூடிய ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் ஆதி நவீன தொழில்நுட்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!