Tamilnadu
இணையத்தில் அழுத மாணவர்கள்.. பிரபல கலாஷேத்ரா அறக்கட்டளை மீது பாலியல் குற்றச்சாட்டு புகார்!
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ’கேர் ஸ்பேஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது பற்றி அறிந்த உடன் கலாஷேத்ரா நிறுவனம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் இறுதியில் "பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், தங்களது அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது" என்று கூறி விசாரணைக் குழுவை முடித்துள்ளது.
இதற்கிடையில் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், "10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர்" என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவை அவர் உடனே நீக்கியுள்ளார்.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலாஷேத்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்