Tamilnadu
மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் போட்டி.. திமுக சுற்றுச்சூழல் அணி அறிவிப்பு.. முழு விவரம் என்ன?
மதராஸ் மாகாணம் என்ற பொதுமை பெயரை 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்த பேரறிஞர் அண்ணா வழியில் வந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் தமிழ்நாடு மாநில பாடலாக "நீராடும் கடலுடுத்த என்ற மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை நமது தமிழ்நாடு மாநில பாடலாக ( தமிழ்த்தாய் வாழ்த்து) அறிவித்து தமிழினத்திற்கு பெருமை சேர்த்தார்.
ஒவ்வொரு மாணாக்கரும் நமது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கற்று, போற்றும் விதமாக திமுக சுற்றுச்சூழல் அணி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் போட்டியை நடத்துகிறது
அதன் விவரங்கள் :
உங்கள் பெயர், தாய் தந்தை பெயர், விலாசம், அலைபேசி எண், பள்ளிக்கூடம், வகுப்பு ஆகிய விவரங்களுடன் போட்டிக்கான காணொளியை இந்த மின்னஞ்சலுக்கு சித்திரை 2/ஏப்ரல் 15, 2023 தேதிக்குள் அனுப்பவும். ( dmkenvironmentwing@gmail.com )
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் ஐந்திலிருந்து ஏழாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு மூன்று பரிசுகளும், எட்டில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மூன்று பரிசுகளும், பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று பரிசுகளும் வழங்கப்படும்.
குறிப்பு : மூன்று பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் காணொளிகளும் சுற்றுச்சூழல் அணியின் சமூக வலைதளங்களிலும் மற்றும் மாநில செயலாளர்களுடைய சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படும் என திமுக சுற்றுச்சூழல் அணி அறிவித்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!