Tamilnadu
தமிழ்நாடு அரசின் 2023- 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை: பேரவையில் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் PTR!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார்.
அதன் விவரம் வருமாறு:-
ஒன்றிய அரசை விட நிதிப் பற்றாக்குறையைத் தமிழ்நாடு அரசு கணிசமாகக் குறைத்துள்ளது. தி.மு.கவின் திராவிட மாடல் அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது. தி.மு.க அரசு பதவியேற்கும் போது ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை தற்போது ரூ.30,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சமூகநீதி, பெண்களுக்கு சமஉரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய நான்கு அடிப்படைத் தத்துவங்களை கொண்டு, நம் நாட்டிற்கே ஒரு கலங்கரை விளக்கமாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது.
சமூக நீதி, அனைவருக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று நாட்டிற்கே கலங்கரை விளக்கமாகத் தமிழ்நாடு அரசு திகழ்கிறது. நூற்றாண்டுக்கு முன்னே சமூக மாற்றத்திற்கு வித்திட்ட நீதி கட்சியின் வழியில் செல்கிறது திராவிட மாடல் ஆட்சி. சமூக உரிமை, சமூக நீதி, அனைவருக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என நாட்டிற்கே கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!