Tamilnadu
கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி மாரடைப்பால் உயிரிழப்பு.. மரணத்திலும் இணை பிரியாத தம்பதி!
காஞ்சிபுரம் அடுத்த பாவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி மல்லிகா. இந்த முதிய தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த கணவரை மல்லிகா எழுப்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் எவ்வித அசைவும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளார்.
இதனால் அவர் கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுத்து துரைசாமியை அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே துரைசாமி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் இருத்து இந்த தகவல் மனைவி மல்லிகாவுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர் இவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இருவரது இறுதி நிகழ்ச்சியும் ஒன்றாக நடத்தி இருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்புத்தியுள்ளது.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!