Tamilnadu
குடும்ப விழாவிற்கு அழைத்த உரிமையாளர்.. சீர் வரிசையோடு வந்து அசத்திய வடமாநில தொழிலாளர்களால் நெகிழ்ச்சி !
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக வட மாநில தொழிலாளிகள் தாக்கப்படுவதாக கொல்லப்படுவதாக வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர் திட்டமிட்டு செய்திகள் பரப்பி வந்தனர்.
இதனை நம்பிய வட மாநில ஊடகங்கள் உண்மையை ஆய்வு செய்யாமல் போலியான செய்திகளை வெளியிட்டன. பாஜகவினரின் இந்த திட்டமிட்ட காழ்ப்புணர்ச்சி காரணமான இந்த செயல் மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் நட்புறவை கெடுக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து இந்த செய்திகள் பரவி வந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மேலும் பீகார் மாநில அதிகாரிகளும், தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்பட்ட வதந்திகளை, தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களே பொய் என்று கூறினர். மேலும் இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், தாங்கள் எந்த வித தாக்குதல்களுக்கும் உள்ளாகவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக வட மாநில தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டின் நிகழ்ச்சி ஒன்றுக்கு குடும்பத்தார் போல் சீர்வரிசையோடு சென்றுள்ளது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜாமணி - பத்மாவதி தம்பதியினர். கட்டுமான கட்டுமான நிறுவன உரிமையாளராக இருக்கும் ராஜாமணியிடம் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் அன்பாக பழகி வருகிறார் ராஜாமணி.
இந்த நிலையில் ராஜாமணியின் மகளான விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உறவினர்கள், குடும்பத்தார் என அனைவரையும் அழைத்த ராஜாமணி, தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களையும் அழைத்தார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த அவர்கள் வெறும் கையோடு வராமல் சீர் வரிசையோடு வந்தனர்.
அதில் வாழைத்தார், பழங்கள், தேங்காய், பூ, பரிசு என பலவற்றை சீராக கொண்டு வந்து அசத்தினர். தொடர்ந்து அவர்கள் உரிமையாளர் மகளுக்கு நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்து குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!