Tamilnadu
“ஒரு வீட்டுக்கு ஒரே ஒரு மின்சார இணைப்பா? - உண்மை என்ன?”: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மின்சார வாரியம்!
ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்து பதியப்பட்டுவருகிறது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் இதுவரை 99 சதவிகிதத்துக்கு மேல் வீடு, குடிசை, விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்து பதியப்பட்டுவருகிறது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது.
தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை முன்மாதிரி ஆணையம், 9.9.2022 அன்று வெளியிட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துகளின்படி, கள ஆய்வின் அடிப்படையில், ஒரே வீட்டில்/குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டின் மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளைப் பொதுபயன்பாட்டுக்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாகக் காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு வீதப்பட்டியல் மாற்று பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டிருக்கிறது.
எனவே, இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களில் பிரிவு அலுவலகங்களுக்குப் பிறப்பிக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வாகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !