Tamilnadu
44 உயிர்களை பறித்த ஆன்லைன் ரம்மி.. தமிழ்நாடு அரசின் தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் RN.ரவி!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மூலம் நாடுமுழுவதும் பலர் தற்கொலை செய்துகொண்ட அவல நிலை நீடித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்போதிருந்த் அதிமுக அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது.
பின்னர் உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது. இதனையடுத்து சரியான சட்ட விதிகளுடன் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி வந்ததும், ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டது.
பிறகு, அடுத்துக் கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது; அங்கு அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பின்னர் அரசு கொண்டு வந்த தடை மசோதாவில் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பினார். உடனே தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளித்து மசோதாவை ஆளுநருக்கு அனுப்பியது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாவை 4 மாதம் 11 நாட்களுக்கு பின்னர் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆளுநருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!