Tamilnadu
”திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் சமமாகப் பார்க்கிறோம்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி தி.மு.க சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றது. இந்த முகாமை கனிமொழி என்.வி.என் சோமு துவக்கி வைத்தார். மேலும் அமைச்சர் சேகர்பாபு உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி, மருத்துவம் என மக்களுக்குத் தேவையான முறையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் இந்த முகாம் மூலம் பயனடைய உள்ளனர். பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதிவரை 90 நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், முதலமைச்சரின் 55 ஆண்டுக்கு மேலான பொது வாழ்க்கையில் பங்களிப்பு, போராட்டக்களம் என அனைத்தும் தெரிந்து கொள்ளப் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 460 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழங்குடியினர் ஆதிதிராவிடர் வசிக்கின்ற இடங்களில் 2500 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் பதினைந்து நாட்களுக்கும் ஒரு முறை ஆலோசனைப் பணிகள் மேற்கொண்டு 80 முதல் 100 கோவில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2000 திருக்கோவில்களுக்கும் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
வடமாநிலத்தவர்கள் தொடர்ந்து அவரவர் சொந்த ஊருக்குச் செல்வதாக வந்த தகவல் தொடர்பாக காவல்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் சமமாகப் பார்க்கிறோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்குகின்ற மாநிலமாகவே தமிழ்நாடு இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !