Tamilnadu
“வாய் கொழுப்போடு பேசி வரும் ஆளுநர் RN.ரவி தமிழ்நாட்டில் நடமாட முடியாது” : முத்தரசன் கடும் எச்சரிக்கை !
கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறு பேச்சை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “ஆளுநர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆளுநர் வாய் கொழுப்போடு பேசும் பேச்சை அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கண்டித்து வருகிறார். இந்தியா பின்பற்றி வருகின்ற மதச்சார்பின்மைக்கு எதிராக, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞருக்கு எதிராக பேசிய ஆளுநர் தற்போது மாமேதை காரல் மார்க்ஸ்க்கு எதிராக பேசியுள்ளார்.
வாய் கொழுப்போடு பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் ஆளுநர் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது. ஆளுநர் செல்லும் இடங்களிலெல்லாம் கருப்பு கொடி காட்டப்படும். அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!