Tamilnadu
“மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன்” : உருக்கமாக பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் !
தமிழில் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு தாவனிக் கனவுகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், நடிப்பில் மட்டுமல்லாமல் பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தொடர்ந்து படங்களில் நடிக்கவே, தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து உச்சம் தொட்டார். மெயின் காமெடி நடிகராக இவர் நடித்த படங்கள் சில என்றாலும், விவேக், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இவர் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து குணச்சித்திர கதாபத்திரங்கள் என பல நடித்து வந்தார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் அரசியிலிலும் ஈடுபாடு மிக்கவராக காணப்பட்டார். இதனாலே 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அதில் தோற்றார்.
இருப்பினும் தனது பகுதி மக்களுக்காக உதவிகளையும், சமூக சேவைகளையும் தொடர்ந்து செய்து வந்தார் இந்த நிலையில், மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்போது மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “24 வருடங்களுக்கு முன்பே எனக்கு தெரியும் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கும் போதே. எம்.ஜி.ஆரின் மிக தீவிரமான ரசிகர். மிகத்தீவிரமான ரசிகர். சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து அவர் ஹீரோவாக நடித்தது போல தேன்றும். அவர் இருவரைப் பற்றி தான்அதிகம் பேசுவார் ஒன்று எம்.ஜி.ஆர் இன்னொன்று சிவன்.
மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன். சிவன் கோவிலுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டுமென்று சொன்னார் அதை நான் நிறைவேற்றுவேன். நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி இருவருடைய இழப்பும் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!