Tamilnadu
திருமண மேடைக்கு போதையில் வந்த மாப்பிள்ளை.. போட்ட நகைகளை பிடுங்கி திரும்ப அனுப்பிய பெண் வீட்டார் !
பொதுவாக ஒரு குடும்பத்தில் யாருக்காவது திருமணம் ஏற்பாடு செய்வதாக இருந்தால், பேச்சுவார்த்தை தொடங்கும்போதே மணமகளை பற்றி மாப்பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளையை பற்றி பெண் வீட்டாரும் அக்கம் பக்கத்தில் விசாரிப்பர்.
அதிலும் பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு ஏதேனும் தவறான பழக்கம் இருக்கிறதா என்பதை குறித்துதான் முதலில் விசாரிப்பர். சிலர் குடிப்பழக்கம் மட்டும் இருந்தால் பெரிதாக அதனை கருதாமல், தங்கள் வீட்டு பெண்ணை கொடுக்க சம்மதம் தெரிவிப்பர்.
பின்னர் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெறும். திருமண வீட்டில் வந்திருக்கும் உறவினர்கள் அனைவரும் தீவிரமாக கல்யாண வேலையை பார்ப்பர். சிலர் பார்ட்டி செய்ய வேண்டும் எண்ணுவர். அதன்படி பெண் வீட்டார் / மாப்பிள்ளை வீட்டார் பார்ட்டி செய்து (மது விருந்து) சில நேரங்களில் திருமண வீட்டை கதி கலங்க செய்துவிடுவர்.
ஆனால் இங்கே உறவினர்களுக்கு பதிலாக மாப்பிள்ளையே குடிபோதையில் மணமேடையில் தகராறு செய்து, பின்னர் அவர் அடி வாங்காத குறையாக தப்பித்து திருமணமும் நடைபெறாமல் நின்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞருக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
அதன்படி சம்பவத்தன்று மாம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் மணமக்களுக்கு reception ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இருவீட்டாரும் அங்கே வந்து மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் என சிலர் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது, மேடையில் மணமகன் சுர்ஜித், போதையில் மணமகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மணமகள் குடும்பத்தார், உறவினர்களிடமும் மேடையில் வைத்து அநாகரிமாக பேசி ந்டந்துகொண்டுள்ளார். இதனால் பொறுமை இழந்த பெண் வீட்டார், ரிசெப்ஷனை பாதியில் நிறுத்தி விட்டு, சுர்ஜித்தை வசைபாட தொடங்கினர்.
அதோடு இதுகுறித்து அந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட பெண் வீட்டார், மாப்பிள்ளை மீது புகாரும் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள், மணமகன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மாப்பிள்ளை ‘நான் செய்தது தவறு.. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். அதோடு மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து போட்ட தங்க வாட்ச், மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்டவையை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
மேலும் இதுபோன்ற ஒருவருக்கு எங்கள் வீட்டுப் பிள்ளையை திருமணம் செய்து வைக்க முடியாது என்று திருமணத்தையும் நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!