Tamilnadu
இன்னோவா கார்.. CCTV-யில் பதிவான காட்சி : பெரம்பூர் நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கும் தனிப்படை போலிஸார்!
சென்னை பெரம்பூரில் உள்ள நகை கடையில் நேற்று முன் தினம் 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் இன்னோவா காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் புகைப்படம் மற்றும் இன்னோவா கார் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளை போலிஸார் வெளியிட்டனர்.
குறிப்பாக சிசிடிவி காட்சிகளின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு காரில் ஏறி கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளது போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல், கொள்ளையர்களை சம்பவ இடத்தில் இறக்கி விட்ட பின்பாக யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என அந்த பகுதியிலே இன்னோவா கார் கொள்ளை சம்பவம் முடியும் வரை சுற்றி திரிந்து வந்துள்ளது. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு கோயம்பேடு வழியாக, மதுரவாயலை தாண்டி பூந்தமல்லி நோக்கி காரில் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளதாக போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து இறங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதும் தெரியவந்துள்ளது.
நகை கடையின் இரும்பு கதவில் துளையிடுவதற்காக கொள்ளையர்கள் 5 கிலோ சிலின்டரை பயன்படுத்தி வெல்டிங் செய்து துளையிட்டுள்ளனர் என்பதும் போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட 9 தனிப்படை போலிஸாரும் தற்பொழுது கொள்ளையர்களை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டியை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் ஆந்திரா நோக்கி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனி படை போலிஸார் கொள்ளையர்களை பிடிப்பதற்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
அதேபோல் நகை கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பயன்படுத்திய இனோவாவின் கார் பதிவெண் போலி பதிவெண் என்பதும் போலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னல்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தனிப்படை போலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!