Tamilnadu
instagram-ல் கெத்து காட்ட வீடியோ வெளியிட்ட வாலிபர்கள்: போலிஸாரிடம் சிக்கிய பிறகு நடந்தது என்ன தெரியுமா?
இன்ஸ்டாகிராம் செயலியை பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தங்களது அன்றாட நிகழ்வுகள் முதல் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது என அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சிலர் அதிகமாக லைக்குகளுக்கு ஆசைப்பட்டு விபரீதமான வீடியோக்களை வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர்களை போலிஸார் பிடித்து, மன்னிப்பு வீடியோவை வெளியிட வைத்து எச்சரிக்கை செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள சாலையில், வாகன ஓட்டிகள் முன்பு நடுரோட்டில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் ஸ்டண்ட் செய்த அந்த வாலிபரை போக்குவரத்து போலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
குறிப்பாக வீடியோவில் பதிவான முக அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தி, ஸ்டண்ட் செய்த வாலிபர் மற்றும் வீடியோ பதிவு செய்த வாலிபர்கள் என மூன்று பேரை போலிஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர், "லைக்குக்காக ஆசைப்பட்டு இந்த வீடியோவை வெளியிட்டதாகவும், இனி இதே போன்று செய்ய மாட்டோம். யாரும் இது போன்று பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபட வேண்டாம்" என மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை அந்த இளைஞர்கள் வெளியிட்டனர். இதனையடுத்து அந்த மூன்று இளைஞர்களையும் இனி இதுபோன்று வீடியோக்களை வெளியிடக்கூடாது என எச்சரிக்கை செய்து போலிஸார் அனுப்பி வைத்தனர்.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!