Tamilnadu
“இந்தியாவிலேயே முதன்முறை.. 5 ஸ்கிரீன் கொண்ட திரையரங்கம் திறப்பு” - பயணிகளை கவர்ந்த சென்னை விமான நிலையம்!
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக 250 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கல்,5 திரையரங்குகல், ஓட்டல்கள், கடைகள், கார் பார்க்கிங் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.
இதில் கந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தகூடிய கார் பார்க்கிங் கட்டடம் பயன்பாடிற்கு கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தை முன்கூட்டியே விமானத்திற்கு வந்து காத்து இருக்கும் பயணிகள் பொழுது போக்கிற்காக, 5 திரைகள் கொண்ட பி.வி.ஆர் திரையரங்கம் இன்று பயன்பாடிற்கு திறக்கப்பட்டது.
இதனை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் கலண்டுகொண்டு திறந்து வைத்தனர். மேலும் நடன நிகழ்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்படு காட்சிப்படுத்தப்பட்டன.
சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்புப் பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் 1,000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்.
மேலும் கூடிய விரைவில் கட்டிமுடிக்கப்படுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் உள்ளிட்டவற்றை திறக்கப்பட உள்ளன. இதனால் விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பொழிது போக்கிற்கு பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவிலேயே முன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுது போக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!