Tamilnadu
குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்த மூதாட்டி: அடுத்த நிமிடமே கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த வகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி ஜெயலட்சுமி ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "மாற்றத்திறனாளி உதவித் தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும்" வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதைப் படித்து பார்த்த ஆட்சியர் மோகன் உடனே மூதாட்டியின் கோரிக்கையை நிறைவேற்றும்படி புதிய மூன்று சக்கர வாகனத்தை வழங்கும்படி உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவை அடுத்து அதிகாரிகள் மூதாட்டிக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கினர்.
இதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த மூதாட்டி ஜெயலட்சுமி ஆட்சியர் மோகனுக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஆட்சியர் மூதாட்டியை மூன்று சக்கர சைக்கிளில் அமரவைத்து மூதாட்டியை ஓட்டிப்பார்க்கச் சொன்னார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த அடுத்த நிமிடமே கோரிக்கை நிறைவேறியதைப் பார்த்து மாற்றுத்திறனாளி மூதாட்டி மகிழ்ச்சியுடன் தனது சொந்தமான மூன்று சக்கரவாகனத்தில் அங்கிருந்து தனது கிராமத்திற்குச் சென்றார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை கொடுக்கும் மனுக்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!