Tamilnadu
“1-ம் தேதி கல்யாணம்.. ஒழுங்கா சமைக்க கத்துக்கோ..” - தாய் திட்டியதால் விபரீத முடிவெடுத்த மணப்பெண் !
திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ளது கீழக்கோடன்குளம் என்ற பகுதி. இங்கு வடக்கு தெருவில் கிறிஸ்டில்லா மேரி என்ற 19 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது.
தொடர்ந்து இவர்களுக்கு வரும் 1-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேரி, தனது மொபைல் போனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் வீட்டில் பெற்றோர் வேலை சொன்னாலும் அதை செய்யாமல் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எரிச்சல் அடைந்த தாய், தனது மகள் மேரியை திட்டியுள்ளார். மேலும் திருமணமாக இன்னும் சில நாட்களே இருக்கிறது என்றும், சமையல் கற்றுக்கொள் என்றும் கூறிக்கொண்டே இருந்துள்ளார். இதனை பெரிதாக கண்டுகொள்ளாத மேரி, தனக்கு விருப்பப்பட்டதை மட்டுமே செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தினரும் தாய், தனது மகளை திட்டியுள்ளார். அதோடு 1-ம் தேதி ஆக இன்னும் 1 வார காலமே இருக்கும் நிலையில், "மாமியார் வீட்டில் கஷ்டப்பட போற" என்று வழக்கமாக தாய் வசைபாடுவது போல் வசைபாடியுள்ளார். இதனால் மிகவும் மனம் நொந்துபோன மேரி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
மருந்தை குடித்த சில நிமிடங்களிலே மயங்கி விழுந்துள்ளார். தனது மகள் மயங்கி கிடப்பதை கண்ட தாய், உடனே கதறி அழுது அவரை உறவினர்களோடு சேர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 2 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், சமையல் கற்றுக்கொள் என தாய் திட்டியதால் கோபமடைந்த இளம்பெண், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!