Tamilnadu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள்.. காளைகளை அடக்கி அசத்திய இளைஞர்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சற்றுமுன் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1100காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கியுள்ளது. 350 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோன்று ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் மாடுகளை பிடித்து வெற்றிவாகை சூடும் அனைத்து வீரர்களுக்கும் தலா ஒரு தங்கக் காசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உருவம் பொறித்த தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், எம்.எல்.ஏக்கள், சு.வெங்கடேசன், தமிழரசி, பூமிநாதன், மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Also Read: “ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டு.. அது கலாச்சாரத்தோடு கலந்தது” : PETA-க்கு முரசொலி பதிலடி!