Tamilnadu
“இந்தியாவில் இந்துத்துவாவை எதிர்க்கும் சக்தி படைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்” : ஆ.ராசா MP புகழாரம்!
சென்னை மதுரவாயல் வடக்கு பகுதி தி.மு.க சார்பில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நொளம்பூரில் நடைபெற்றது. வளசரவாக்கம் மண்டலக் குழு தலைவர் ராஜன் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டப்பேரவை கொறடா செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ஆ.இராசா எம்.பி., “தமிழகம் சாதி,மதம் கடந்து வருவதற்கு திராவிட மாடல் ஆட்சி காரணம். இதற்காக பாடுபட்டவர்களில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியருக்கு பெரும் பங்கு உண்டு. ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியை வளர்க்க 300 கோடி ஒதுக்கியுள்ளது.
நாடுமுழுவதும் 11 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. ஆனால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கு 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழுக்கு 2 கோடி கூட கிடையாது. ஒன்றிய அரசு பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டை கொடுகிறோம் என்ற பெயரில் படிப்படியாக இன்னும் 5 ஆண்டுகளில் சாதிவாரியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் சாதி ரீதியான பணிக்கு அனுப்பி விடுவார்கள்.
மேலும் இந்துத்துவாவின் ரெய்டுக்கு பயந்து மம்தா பானர்ஜி,மாயாவதி, ஜெகன் மோகன் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பதில்லை. இந்திய துணை கண்டத்தில் இந்துத்துவாவை எதிர்க்கும் சக்தி படைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான். 2024 ஆம் ஆண்டு முழு அமைச்சரவை மட்டுமல்ல பிரதமர் யார் என்பது வரை பட்டியல் தயாரிக்க போவது தலைவரின் செனடாப் இல்லம் தான்” என்று தெரிவித்தார்.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!