Tamilnadu

கர்நாடகாவில் மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் : கூரியர் மூலம் வந்த மிக்சி பார்சல் வெடித்து ஒருவர் படுகாயம்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்ததில் காயம் அடைந்த தீவிரவாத செயல்களில் ஈடுபட வந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் வெடிகுண்டு வைக்கத்தான் வந்துள்ளார் என்ற விவரமும் தெரிய வந்தது தொடர்ந்து என்.ஐ.ஏ போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதி அருகே உள்ள பிரபல கூரியர் நிறுவனத்தின் மூலம் வந்த மிக்சி கிரைண்டர், டி.டி.டி.சி கூரியர் அலுவலகத்தில் மர்மமான முறையில் வெடித்தது. கூரியர் மூலம் வந்த புதிய மிக்சி கிரைண்டர் வந்துள்ளது. அப்போது அதனை சோதனை செய்த போது வெடித்தது. இந்த வெடி விபத்தில் கூரியர் நிறுவத்தின் உரிமையாளர் சசி பலத்த காயம் அடைந்து, ஹாசனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மங்களூரு குண்டுவெடிப்பு தேசிய அளவில் செய்தியாகியது. இதனையடுத்து ஹாசன் எஸ்.பி ஹரிராம் சங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி ஹரிராம் சங்கர், “டிசம்பர் 26ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் கே.ஆர்.புரத்தில் உள்ள டி.டி.டி.சி கூரியர் நிறுவனத்துக்கு மிக்சி கிரைண்டர் பார்சல் வந்தது.

பார்சலை திறந்து பார்த்தபோது, ​​வெடி விபத்து ஏற்பட்டது. கொரியர் வெடித்ததில் டி.டி.டி.சி ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும் அப்போது வெடிப்பு ஏற்பட்டதாகவும், சம்பவத்தில் அலுவலக ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறுகின்றனர். குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

மைசூரிலிருந்து தடய அறிவியல் ஆய்வகக் குழு மேலதிக விசாரணைகளுக்காக சம்பவ இடத்திற்கு வரவுள்ளது. குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும்” என்றார். இந்நிலையில் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று ஹாசன் மக்களுக்கு எஸ்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read: இலையும் முள்ளும் to பாலிவுட் படம் வரை.. பிரபல மலையாள இயக்குனர் கே.பி.சஷி மறைவு : திரையுலகத்தினர் இரங்கல்!