Tamilnadu
200 ஆண்டுகளில்.. நேற்றில் இருந்தே சென்னையில் தொடரும் கனமழை: வெதர்மேன் சொல்லும் காரணம் என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக நேற்றில் இருந்தே மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து நேற்று இரவில் இருந்தே சென்னையில் விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நெல்லை ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் நாளில் வட தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "2001ம் ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நாளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை காலையில் நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால் குடை எடுத்துக் கொள்ளுங்கள்.
கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நாளை மழை பெய்யும். தென் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும். இந்த மழை டெல்டா மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இந்த மழைக்குச் சென்னையில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பி நிலத்தடி நீரும் நன்றாக உள்ளது. வரும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் 200 ஆண்டுகளில் முதல் முறையாகச் சென்னையில் தொடர்ந்து 3வது முறையாக 1000 மி.மீ மழைக்கு வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!