Tamilnadu

அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. வறுமையில் உழன்ற குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் !

தி.மு.க தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் ஏறியதில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்க பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை - எளிய மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்கள், நிவாரணம் உதவி முறையாக செய்யப்படுகிறதா என்பதை நேரடியாக கண்காணித்து வருகிறார். அதுமட்டுமல்லாது முதலமைச்சர் உதவி மையத்திற்கு வரும் மனுக்களும் பரிசிலினைக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஒருபக்கம் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தால், மறுபக்கம் கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை திமுகவினர் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். குறிப்பாக முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மக்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவி, மருத்துவ முகாம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கழக நிர்வாகிகள் செய்துவரும் உதவி சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானதை பார்க்க முடியும். மேலும் ஆவடி அருகே முகசிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சமீபத்தில் கூட படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் சுங்கச்சாவடியில் முந்திரி வியாபாரம் செய்து வந்த மாணவியின் கல்வி படிப்பை மீண்டும் தொடர் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் உதவி செய்து நிகழ்வு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டை குவித்தது.

அதுமட்டுமல்லாது, வேலூர் மாவட்டத்தில் உடல் மற்றும் மனநிலை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட தனது 19 வயது இளைஞருக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் குடும்ப சூழலை சமாளிக்க பொருளாதார உதவிக்கு அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து திருச்சியில் தோல் நோயால் பாதிக்கபட்டுள்ள சிறுமிக்கு அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக சென்று உதவி செய்துள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், தில்லம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் 11 வயதாகும் சிறுமி கிரிஜா. இவருக்கு அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்த தகவலறிந்த அமைச்சர் கே.என்.நேரு சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுமியை நலம் விசாரித்தார். மேலும் கிரிஜாவின் மருத்துவ செலவிற்கும், மேல் சிகிச்சைக்கும் மருத்துவர்களிடம் பரிந்துரை செய்தார். அமைச்சரின் இந்த துரித நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: வறுமையில் வாடிய பெண்.. உடல்நிலை பாதித்த சிறுவனுக்கு துணை நின்ற அரசு - தி.மு.க MLA செய்த நெகிழ்ச்சி உதவி!