Tamilnadu
“இந்தியாவின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் 74%.. தமிழ்நாட்டில் மட்டும் 80%”: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு திட்ட விழாவினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோர் துவக்கிவைத்தனர்.
பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கையேட்டினை வெளியிட்டு விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இந்தியாவில் 74 சதவீதம் கல்வியறிவு உள்ள நிலையில், தமிழகத்தில் 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக 4 .8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்று கொடுக்க, தமிழக அரசு 9.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எழுத்தறிவு என்பதே பள்ளிக்கல்வித்துறை இலக்காகும்.
பள்ளிகளில் விளையாட்டு பாட வேளையில் மற்ற பாடங்களை நடத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளது. மாநில கல்விக் கொள்கை குறித்து நிபுணர் குழு அனைவரிடமும் கருத்துகள் கேட்டு, ஜனவரிக்குள் அறிக்கை முதல்வரிடம் வழங்குவார்கள். அதன்பேரில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
காலை சிற்றுண்டி திட்டத்தை இரண்டாம் கட்டமாக அமுல்படுத்த முதல்வர் விரைவில் உத்தரவிடுவார். இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக நடைபெற்று வருவதால் அதை நிறுத்தும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!
-
“தமிழ்நாடு மக்களின் அன்போடு புறப்பட்டுச் செல்கிறேன்!” : பயணத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்!
-
ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : ஒரு வார கால அரசுமுறைப் பயணம்!