Tamilnadu
கல்லூரி கழிவறையில் மாணவர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள்!
பெங்களூரு நகரில் உள்ள ஏ.எம்.சி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தனர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நித்தின். இவரது பெற்றோர்கள் துபாயில் வேலைபார்த்து வருகின்றனர்.
இதனால் மாணவன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். மேலும் பள்ளி படிக்கும் போதே விடுதியில் தங்கி நித்தின் படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டுதான் பள்ளிப் படிப்பு முடித்து விட்டு பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நித்தின் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளான்.
இந்நிலையில் நித்தின் சம்பவத்தன்று தனது விடுதி அறையைப் பூட்டிக்கொண்டு நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராத காரணத்தினால் சக மாணவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழிவறையில் நித்தின் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் நித்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கும் நிதின் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் மகன் தற்கொலை குறித்து துபாயில் உள்ள பெற்றோர்களுக்கு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!