Tamilnadu
பா.ஜ.க நிர்வாகி நடத்தும் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!
நாகை அருகே புத்தூர் பகுதியில் தனியார் நர்ஸிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் வெளியூரில் இருந்து படித்து வரும் மாணவிகளுக்காக விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இக்கல்லூரியில் உடற்கூறியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சதீஷ். இவர் கடந்த 10ம் தேதி விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவி ஒருவருக்கு செல்போனில் அழைத்துள்ளார். அப்போது அவர், 'உன்மீது புகார் வந்துள்ளது. உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும். எனது வீட்டிற்கு வா' என கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, 'சார் நான் கல்லூரிக்கு வரேன்' என கூறியுள்ளார். ஆனால் ஆசிரியர் சதீஷ், 'நீ இப்போதே வீட்டிற்கு வரவேண்டும்' என தொடர்ந்து மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். அப்போதும் மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியும் ஆசிரியர் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பிறகு ஆசிரியரின் தொல்லை தாங்கிக் கொள்ள முடியாத மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே மாணவியுடன் ஆசிரியர் பேசிய ஆடியோவை மாவட்ட சமூகநலத்துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இது பற்றி அறிந்த சகமாணவிகள் ஆசிரியர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றுள்ளது.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்-க்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் இது குறித்து விசாணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து போலிஸார் ஆசிரியர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நர்ஸிங் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் பா.ஜ.க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க நிர்வாகி நடத்தும் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!