Tamilnadu
மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்தின் AUDIO வெளியாகி அதிர்ச்சி!
என்னதான் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாங்கி பாஜக ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சியால் தலைநிமிர முடியாத நிலையே இருக்கிறது. இதன் காரணாமாக திரை பிரபலங்களை வைத்து தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த பாஜக கடந்த சில ஆண்டுகளாகவே நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஆனாலும், பாஜகவால் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில், அந்த கட்சிக்கு நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு கவுன்சிலரின் கணவரை பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1997-ம் ஆண்டு முதல் பாஜகவில் உறுப்பினராக இருப்பவர் ஹரிஹரன். இவர் மாவட்ட செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள ஆடியோவில் பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தொலைபேசியில் கே.பி.ராமலிங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடும் ஆடியோவையும் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார். அதில் ராசிபுரம் நகருக்கும் நுழைந்தால் கொலை செய்து விடுவேன் என மோசமான முறையில் கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளது தெளிவாக பதிவாகியுள்ளது.
பொதுவாக ஒரு கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சியான பாஜகவில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளருக்கு பாஜக மாநில துணை தலைவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
 - 
	    
	      
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
 - 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!