Tamilnadu
இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயல்.. 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படை: தயார் நிலையில் தமிழ்நாடு!
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்புயல் சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இப்புயல் கரையை கடக்கும் போது சென்னையில் அதிகன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நேற்று தலைமைச் செயலாளர் இறையன்புவை தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சென்னை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அலுவலகத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு, மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், கயிறு, மர அறுவை இயந்திரங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என அனைத்தையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். சென்னை அருகே நிலைகொண்டுள்ள புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !