Tamilnadu
“திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு பற்றி எரிகிறது”: பா.ஜ.க கும்பலை கடுமையாக சாடிய சுப.வீரபாண்டியன்!
சென்னை மாதவரத்தில் வடக்கு பகுதி தி.மு.க சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், “பா.ஜ.க.வின் நோக்கம் இரண்டுதான். ஒன்று தி.மு.க.வை எதிர்ப்பது; மற்றொன்று அ.தி.மு.க அழிப்பதுதான். எத்தனை கட்சிகளில் இப்படிப்பட்ட கருத்தரங்கள் நடைபெறுகிறது. அ.தி.மு.கவில் பொதுக்குழு நடத்த முடியவில்லை பொதுக்குழு நடத்துவதற்கு நீதிமன்றம் போக வேண்டி உள்ளது.
இன்று ஏன் தி.மு.க எல்லாம் புயலியும் எதிர்த்து நிலைத்து நிற்கிறது என்றால், நமக்கு அடிப்படையான கொள்கைகள் இருக்கிறது. தகுதி வாய்ந்த தலைமை இருக்கிறது. மிகச் சரியான கட்டமைப்பு உள்ளது. மரத்தின் கொள்கை தான் வேர். தலைமை தான் அடிமரம். அமைப்பு தான் கிளைகள். இது மூன்றும் சரியாக இருக்கிற காரணத்தால் தான் முதலமைச்சர் எங்கள் திராவிட இயக்கத்தை எந்த கொம்புனாலும் ஆட்டவோ அசைக்கவும் முடியாது என்று சொல்வதற்கு காரணம் இங்கு கொள்கை இருக்கிறது.
அடுத்தடுத்து வருகிற வாழையடி வாழையாக தலைவர்களும் வருகிறார்கள். தொண்டர்களும் வருகிறார்கள். திமுகவில் எப்போது வெற்றிடம் இல்லை. அதனால் தான் தாமரைக்கு இங்கு இடம் இல்லை. பொதுவாக திராவிட மாடல் என்று சொன்னாலே பற்றி எரிகிறது. வேறொன்றுமில்லை எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம் மாடல் என முதலமைச்சர் எளிமையாக விளக்கினர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!