Tamilnadu
மதுரை AIIMS: “எப்போ கேட்டாலும் பணி எப்போ தொடங்கும்னு மட்டும் சொல்ல மாட்றாங்க” - சு.வெங்கடேசன் MP தாக்கு !
மதுரை எய்ம்ஸ் குறித்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் வலிமையாக நாங்கள் கேள்விகளை எழுப்புவோம் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா வரும் 30-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. புத்தக வாசிப்பாளர்கள் பலரும் புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், சேலத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளராகளை சந்தித்த அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, "புத்தக கண்காட்சி என்பது சமூகத்தில் நடக்கும் மற்ற கண்காட்சியை போல் அல்ல. இது ஒரு மகத்தான அறிவு இயக்கம்; பண்பாட்டு இயக்கம். தமிழகத்தில் இது போன்ற புத்தக கண்காட்சி ஆங்காங்கே நடைபெற்று வந்தது.
ஆனால் தற்போது இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. புத்தக வாசிப்பு தான் அறிவை வளர்க்கும்; சமூகத்தில் கேள்வி கேட்கக்கூடிய பொது சிந்தனையை வளர்க்கும். இது போன்ற அறிவு இயக்கம் சேலத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தேசிய அரசியலமைப்பு நாளன்று இந்திய வரலாற்று கழகம் கருத்துரை ஒன்றை அனுப்பியது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் சமஸ்கிருத சொல்லே கிடையாது. ஆனால் இன்றைக்கு அந்த கருத்துரையில் இரண்டு சமஸ்கிருத சொல்லை வைத்து அரசியல் சாசனத்திற்கு மறு விளக்கத்தை கொடுத்து வருகிறது ஒன்றிய அரசு. சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு தனது கூரிய எதிர்வினையை ஆற்றும்; ஆற்றி கொண்டிருக்கிறது' என்றார்.
தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒன்றிய அரசு ஒவ்வொரு கதையாக சொல்கிறது. நீதிமன்றத்தில் 2026-ல் கட்டி முடிப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. எப்போது இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டாலும் கட்டி முடிக்க கூடிய தேதியை சொல்கிறார்களே தவிர, துவங்க கூடிய தேதியை சொல்ல மறுக்கிறார்கள்.
இது ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயலாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் எய்ம்ஸ்-ஐ எப்படியாவது கொண்டு வந்தே தீருவோம். அதுவரை ஓயமாட்டோம். நாடாளுமன்றத்தில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் மதுரை எய்ம்ஸ் எப்போது துவங்கப்படும் என்று வலிமையாக நாங்கள் கேள்விகளை எழுப்புவோம்" என்றார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!