Tamilnadu
“நீங்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி; தைரியம் இருந்தால்..” : எடப்பாடிக்கு சவால் விட்ட ஆர்.எஸ்.பாரதி!
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைக்கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
அப்போது ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “திரவிட இயக்கம்தான் இனத்தையும் மொழியையும் காப்பாற்றும் கொள்கையுள்ள கட்சி. இந்தி எதிர்ப்பு என்பது தி.மு.க.காரனின் ரத்தத்தில் ஊரியது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசியலுக்கு வர காரணம் இந்தி எதிர்ப்புதான். தனது 14 வயதில் தமிழ் கொடியை கையில் ஏந்தி 93 வயதுவரை இந்தி திணிப்பை எதிர்த்தே மறைந்தவர் கலைஞர். இந்தி எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் 62 நாள் பாளையங்கோட்டையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்ற மாநிலங்களில் இன்று அவர்களின் தாய் மொழி அழிந்து வருகிறது. மக்களை ஏமாற்றி ஒன்றிய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது. இதற்கு ஒரு ஆளுநர் வேறு பணியாற்றுகிறார். நமது வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழகம் திராவிட நாடு இல்லை என்கிறார். தமிழை அழிக்க முயற்சி நடக்கிறது.
இன்று ஆளுனரைச் சந்தித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் நடக்கிறது. போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புகார் அளித்துள்ளார். எடப்பாடியை பார்த்து கேட்கிறேன் உங்கள் ஆட்சியில் எல்.ஈ.டி பல்பு வாங்கியது, தொடப்பம் வாங்கியது முதல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நானும், சபாநாயகரும் வழக்கு தொடுத்துள்ளோம்.
மேலும் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குட்கா விற்பனை செய்ததாக நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு சி.பி.ஐ யை வைத்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயகாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. எனவே நீங்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என எடபாடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
போதைபொருள் விற்பனையில் பா.ஜ.கவினர்தான் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறேன். உதாரணமாக 5½ கோடி ரூபாய் மதிப்பில் சிக்கிம் மாநிலத்தில் கிராயின் போதைப் பொருள் துறைமுகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. ஆனால் தற்போது இந்த பொருட்கள் எங்கே சென்றது என தெரியவில்லை. துறைமுகம் யார் கையில் உள்ளது என்பது அனைவரும் அறிவார்கள். தைரியம் இருந்தால் எடப்பாடி இதுகுறித்து கேட்கட்டும்” என தெரிவித்தார்
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!