Tamilnadu
50 ஜிபி டேட்டா இலவசமுனு லிங்க் வந்தா நம்பாதீங்க.. FIFA கால்பந்து தொடரை வைத்து நடக்கும் மோசடி!
கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரை நோக்கியே இருக்கிறது. இந்த தொடரில் ஜப்பான் அணிகள் கத்துக்குட்டி அணிகளுடன் தோற்றுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அர்ஜென்டினா அணி 1-2 என்ற கணக்கில் சவூதி அரேபியா அணியுடன் தோல்வியடைந்தது உலக கால்பந்து ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்தது.
அடுத்தபடியாக 4 முறை உலகக் கோப்பை வாங்கிய ஜெர்மனி ஜப்பான் அணியுடன் படுதோல்வி அடைந்தது. இப்படி அடுத்தடுத்து ஜப்பான் அணிகளே தோல்வியடைந்துள்ளதால் கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண இலவசமாக 50 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக இணையதளங்களில் லிங்க் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்த லிங்கை பயன்படுத்துபவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண இலவச 50 ஜிபி டேட்டா தருவதாக சமூகவலைதளங்களில் வரும் பதிவுகளை நம்ப வேண்டாம் சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 50 ஜிபி டேட்டா தருவதாகக் கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!